உங்ககிட்ட பேசணும்
ஆண் : ஒரு நிமிஷம் உங்ககிட்ட பேசணும் ..
பெண் : சொல்லுங்க என்னவிஷயம் ..
ஆண் : 5 நிமிஷத்துல ஒரு பொண்ணுமேல காதல் வந்தா தப்பா ?
பெண் : தப்பில்ல ..
ஆண் : 5 மாசமா ஐந்து ஐந்து நிமிஷமா அவளை பார்த்து கொண்டே காதல் செய்தா தப்பா ..
பெண் : தப்பு மாதிரி தெரியுது ..
ஆண் : 5 வருஷமா ஐந்து ஐந்து நிமிஷமா அவ பின்னாடியே சுத்திகிட்டு இருந்தா தப்பா ..
பெண் : தப்பு தான் ..
ஆண் : அதனால தான் இப்போ உங்க கிட்ட என் காதல சொல்ல வந்தேன் ..
பெண் : நீங்க 5 நிமிஷத்துல காதல் வந்துதுன்னு சொன்னது தப்பில்ல 5 மாதமா தினமும் ஐந்து ஐந்து நிமிடமா என்னை பார்த்து கொண்டிருந்ததும் தப்பில்ல ஆனா 5 வருஷமா தினமும் ஐந்து ஐந்து நிமிடமும் என்ன பாத்துகிட்டு இருந்தது தான் தப்பு..
ஆண் : ஏன் அப்படி சொல்றிங்க ..
பெண் : ஏன்னா நீங்க 5 நிமிஷத்துல காதல் வந்துச்சின்னு சொன்னப்போ எனக்கு கல்யாணம் ஆகல.... 5 மாசமா பின்னாடி சுத்துனப்பவும் எனக்கு கல்யாணம்..ஆகல ஆனா 5 வருஷமான்னு சொன்னிங்களே எனக்கு 4 வருஷத்துக்கு முன்னாடியே கல்யாணம் ஆயிடுச்சி அதனால தான் தப்புன்னு சொன்னேன் ...!!!
இனியாவது 5 வருஷம் 10 வருஷம்னு எந்த பொண்ணு பின்னாடியும் சுத்தாம மனசுல பட்டது பட்டுன்னு சொல்ல பழகுங்க ...
காதல் பட்டாம்பூச்சி மாதிரி அழகா இருக்கும் ஆனா கிட்ட போனா பறந்திடும் சிலருக்கும் உடனே கையில கிடைத்துவிடும் சிலருக்கு கிடைக்காது ஆனா பறந்து போன பட்டாம்பூச்சிதான் வேணும்னு நினைக்காம உங்களுக்குன்னு ஒரு பட்டாம்பூச்சிய சீக்கிரம் கண்டு பிடிங்க ...
உங்களுக்கு காதல் சொல்ல தைரியம் வருதோ இல்லையோ கல்யாண வயசு வந்தா எங்களுக்கு வரங்கள் வந்து சேர்ந்து விடுகிறது ...உங்கள் காதல் அருவி வருமா வராதா என்று நினைப்பதற்குள் எங்களுக்கு கல்யாணமே முடிந்துவிடுகிறது ... என்று சொல்லி தன் வழி நடந்தால் ......பெண்
ஆமாங்க ..
காத்திருந்தால் கிடைப்பதல்ல காதல் ..
கவிதை பாடி திரிவதல்ல காதல்..
புரிந்து கொண்டு வருவதே காதல் ...
புரியாத காதல் தெரிவதில்லை ...
சொல்லாத காதல் புரிவதில்லை ...