ஒரு சின்ன கதை

காலை கதிரவன் உதித்தனன்
கோழியும் பறவைகளும் கூவின பாடின
கலப்பை சுமந்து பலர் கழனி சென்றனர்
கையில் பனுவலுடன் நானும்
கல்லூரி கிளம்பினேன்.

பேருந்துப் படியிறங்கி
பேரகலப் பாதைவழி
கல்லூரி வரலானேன்
வந்தவழி வழிமாறி
வண்ணநிலா வரக்கண்டேன்
வான் பிறையோ
வானவில் அழகோ
கானகத்து முல்லையோ
கவினோ அவள் வாய் சிரிப்போ

புத்தகக் கட்டு தூக்கி
மார்போடு அதை அணைத்து
மந்தகாசப் புன்னகையோடு
எதிரில் வந்தாள் ஒரு இளஞ் சிட்டு.
வைத்த விழி வாங்காமல்
வந்தவளை நான் பார்க்க
பூச்சரம் விழக் கண்டேன்
பூமாது கூந்தலில் இருந்து
பூச்சரம் விழக் கண்டேன்

பூவையே சற்றுப் பொறு
பூவை எடுத்துச் செல்லென
கதை அறிந்த அவளோ
நாணித் தலை குனிந்தாள்
நன்றிதனை சொல்லி வைத்தாள்

பொன்மாலைப் பொழுதினிலே
பூங்கா வனத்தினிலே
அமைதிபெற அமர்ந்திருந்தேன்
அங்கும்தான் அவள் வந்தாள்
பங்கயக் கண் விரித்து
பாவையவள் வினா விரித்து
பக்கத்தில் வந்து அமர்ந்தாள்
பரவசமோ நான் கொண்டேன்

கை பறித்த பூவை நன்று என்றேன்-அவளோ
பூவை நல்ல பூவை என்றாள்
பா-வை இயற்றிடலாம் என்றேன்-அவளோ
இப் பாவையை ஏற்றிடலாம் என்றாள்
கோயிலுக்கு ஏற்றதுதான் என்றேன் -அவளோ
இக் கோவுக்கு ஏற்றதுதான் என்றாள்

அடுத்தடுத்த அவளின் சொல்லும்
பின்னர் அகப் பொருளைச் சொல்லும்
கண்டு கொண்ட நானோ
களிப்பு மிகு மானோ

அம்மானும் இம்மானும்
அகன்றகன்று வந்தது
எம்மாந்தருமில்லா நேரம்
இரண்டுமே இணைந்தது
இம்மாக் காட்சி கண்டு
இன்ப நிலவு புன்னகைத்தது .

எழுதியவர் : சுசீந்திரன். (30-Jan-14, 11:48 am)
சேர்த்தது : MSசுசீந்திரன்
Tanglish : oru sinna kathai
பார்வை : 56

மேலே