கண்டால் சொல்லுங்க சாமியோவ் - மணியன்

திருடினவங்களை கண்டு பிடிக்கிற
மிஷின் ஒண்ணு கண்டு பிடிச்சேங்க. . .
கேள்விப்பட்ட ஒபாமா என்னைக்
கூப்பிட்டாருங்க. நானும் அமெரிக்கா
போனேன்.மிஷின் உதவியால ஒரே நாள்ல
10 திருடர்களை பிடிச்சாங்க. . .
இதைக் கேள்விப் பட்ட கேமரூன்
சும்மா இருப்பாரா . . இங்கிலாந்துல
ஒரு பேங்குல கொள்ளை போய் 9 வருஷம்
ஆச்சாம். பிடிக்க முடியுமான்னு கேட்டாரு.
என்ன ஆச்சரியம் பாருங்க போன 1 மணி
நேரத்துல கண்டு பிடிச்சாச்சு. .
அது சரி இதை எல்லாம் என்ட ஏன்
சொல்றேன்னு கேட்குறீங்களா. . .
சொல்றேன் சாமி . . . சொல்றேன். . .
இன்னைக்கு காலையில 8 . 00 மணிக்குத்தான்
எங்க ஊருக்கு வந்தேன். ஊரு தலைவர் அவர் வீட்டுல பித்தளை சொம்பு காணாமல் போய் 3 வருஷம் ஆச்சு. கண்டு பிடிச்சுத் தரச் மிஷினோடு வரச் சொல்லி இருக்கிறாரு. . .
என்னன்னு சொல்லுவேன் என் மிஷின் 8 , 01 க்கே காணோம் அய்யா. . .
திருடினவனை கண்டு பிடிக்கிற திருடு போன திருட்டு மிஷினை திருடுன திருடனை எங்காவது பார்த்தால் தகவல் சொல்லுங்க
சா. . .மி. . யோ. . . . . வ். . .
எனக்கு பொறக்கிற அத்தனை புள்ளைக்கும் உங்க பேரையே வைக்கிறேன். . .