அம்மா பிள்ளை
(சிறுவனிடம், அவனின் தந்தை..)
அப்பா : ரவி..உனக்கு யாரைப் பிடிக்கும்? அம்மாவையா?அப்பாவையா?
மகன் : ரெண்டு பேரையும் பிடிக்கும்.
அப்பா : யாராவது ஒருத்தர சொல்லு!
மகன் : ம்ஹும்..ரெண்டு பேரையும் பிடிக்கும்.
அப்பா : சரி,அம்மா ஊட்டிக்கும், அப்பா பாட்டி வீட்டுக்கும் போனா, நீ யார் கூட போவ!
மகன் : ஊட்டிக்கு தான் போவேன்!
அப்பா : ஏன்?
மகன் : பாட்டி வீட்டை விட ஊட்டி சுத்தி பாக்குறதுக்கு நல்லா இருக்கும்ல.
அப்பா : சரி, அப்பா ஊட்டிக்கும், அம்மா பாட்டி வீட்டுக்கும் போனா, நீ யார் கூட போவ!
மகன் : பாட்டி வீட்டுக்குத்தான்.
அப்பா : ஏன்?
மகன் : அதான் ஊட்டிக்கு தான் ஒரு தடவை போய்ட்டு வந்துறோம்ல!
அப்பா : விடாக்கண்டனுக்கு, கொடாக்கண்டந்தாண்டா நீ!
.