வேதாளக்கேள்வியும் விக்கிரமப் பதிலும் -- மணியன்

ஒரு கிலோ சர்க்கரை வாங்கினேன்.900 கிராம்தான் இருந்தது ஏன் ?
ரேசன் கடையில் வாங்கி இருப்பாய்.
========(=========(=========
நல்லா எரிஞ்சுட்டிருந்த பல்பு திடீர்னு அனைஞ்சு போச்சு
பவர் கட்டா இருக்கும் .
====================
அஞ்சு வருசத்துக்கு முன்னே ஒருத்தரை பார்த்த ஞாபகம் இப்பதான் மீண்டும் பார்க்கிறேன்.
நல்லா பாரு உங்க ஊரு MP ஆக இருக்கும்.
============
திடீர் திடீர்னு ஒவ்வொருத்தரா வந்து கும்பிட்டு
காலில் விழுகுறாங்கப்பா.
தேர்தல் வந்தால் அப்படித்தான் நடக்கும்.
===========
பள பள ரோட்டுல நடந்து போன சுப்பையாவை திடீர்னு காணோம்
திறந்து கிடந்த பாதாள சாக்கடையில் விழுந்து இருப்பார் பாரு பாவம் அவரு.
==========
நிலக்கரி ஊழல்ல இருபது வருசத்துக்கு பிறகும்
உன் பேரையும் சேர்த்து இருக்கிறாங்களாமே.
சும்மா காமடி பண்ணாதே. தீர்ப்பு வரும் போது நான் உயிரோடு இருந்தால் பார்க்கலாம்.
==========
பாலிதீன் பயன்படுத்தாதீங்கன்னு சொன்னதை ஃபாலோ பண்ணினேனப்பா எனக்கு இப்ப 20 குட்டிகள்.
ஒரு தடவை கூட கல்யாணம் ஆகல எனக்கு.
என்ட போய் இப்படி கேட்கலாமா செல்லம் ச்ச்சீய். .
===========
47 வது முறையாக போர் குற்றம் பற்றி அமெரிக்கா தீர்மானம் கொண்டு வரப்
போகுதா. . . மே. . .
போரா எப்ப நடந்துச்சு. . .
=========
இன்னும் சில கேள்விக. . . . .
அட ராசா . . . நிறுத்துப்பா. . . பதில் சொல்லுறதுக்குள்ள என் தலை
வெடித்து விட். . . . . . . . . டமார் . ! ! ! !