காதல் என்றால்

*காதல் என்றால்
என்னவென்று
படித்திருக்கிறேன்
சங்க காலந்தொட்டு
சமீப காலம் வரை...
*காதல் என்றால்
என்னவென்று
பார்த்திருக்கிறேன்
கறுப்பு வெள்ளை படந்தொட்டு
கலர் படம் வரை..
*கண்டதும் காதல்
காணாமலே காதல்
கணினி மூலம் காதல்
கடல் கடந்த காதல்
கேட்டு சிரித்திருக்கிறேன்...
*காதல் என்றால்
என்னவென்று
உணர்ந்த போதுதான்
அது பார்த்தது படித்ததை விட
பன்மடங்கு வியப்பாய் இருந்தது...
*படித்தது பாதியல்ல!
பார்த்தது மீதியல்ல
எந்த கவிஞனுமே_ காதலை
சொல்லத் தான் முயலுகின்றான்
முழுவதுமாய் சொன்னதில்லை...

எழுதியவர் : சித்ரா ராஜ் (31-Jan-14, 7:38 pm)
Tanglish : kaadhal endraal
பார்வை : 70

மேலே