சோகம்

அவன் : மாப்பிள...ஏண்டா இன்னும் சோகமா இருக்குற?

இவன் : பொண்டாட்டி செத்து ரெண்டு நாளாகியும், கண்ணுல ஒரு சொட்டு கண்ணீர் கூட வர மாட்டேங்குதுடா....பார்க்கிறவுங்கல்லாம் தப்பா நினைக்கிறாங்கடா...நானும்,எவ்வளவோ முயற்சி பண்ணி பார்த்துட்டேன், முடியலடா...

அவன் : இதுக்கு ஏண்டா கவலைப்படுற மாப்பிள! நான் சொல்றா மாதிரி செய் கண்ணீர் தன்னால, காவிரி ஆறு மாதிரி வத்தாம வரும்.....

இவன் : என்னடா அது?

அவன் : உன் பொண்டாட்டி திரும்ப உசுரோட வந்துட்டதா நினச்சுக்கோடா.....

(கேட்டதுதான் தாமதம்.. நம்மாளு கண்ணுல இருந்து வந்ததே பாக்கணும் கண்ணீர்... தோத்துப் போச்சு காவிரி ஆத்துத் தண்ணீர்!!!)

எழுதியவர் : உமர்ஷெரிப் (31-Jan-14, 11:21 pm)
Tanglish : sogam
பார்வை : 217

சிறந்த நகைச்சுவைகள்

மேலே