தந்தையே நீங்கள் தான் எனக்கு முன்னுதாரணம்

என் தோளில் சுமை வந்த போது
உணர்ந்தேன் தந்தையே -என்
குடும்பத்தில் நீங்கள் சுமந்த சுமையை தனி மனிதனாய் உழைத்து -ஒரு வேளை சாப்பாட்டுக்கு நீங்கள் சுமந்த சுமையையும் பட்ட பாட்டையும்
நான் தந்தையானபின் உணர்ந்தேன் ....!!!
_
அடிப்படை ஆதாரம் எதுவுமின்றி
ஆதரவு கொடுக்கும் உறவுகள்
இருந்தும் உதவ வராத உறவுகளும் ...
விழுந்தால் தூக்கி விட கரமும் இன்றி எம்மை யாரும் விழுத்தி விட கூடாது சொந்தகாலில் நிற்க கற்று தந்த தந்தையே
நான் தந்தையானபின் உணர்கிறேன்...!!!
_
வசதி கொண்டவன் வாசல் மிதியாதே சிறு வசதி செய்துவிட்டு உன்னை
அடிமையாக்கி விடுவான்....!
_
உழைத்து உண்ணாத நண்பன் வேண்டாம் உன்னை அவன்
சோம்பேறி ஆக்கிடுவான்...!
தலை குனிந்து பேசாதே -உன்
தன்மானத்தை இழக்காதே...!
_
இவற்றின் பலனை உணர்கிறேன் நான் தந்தையானபின் உணர்கிறேன்...!!!
_
தோல் சுருங்கி தலை நரைத்து
வீட்டில் என்னுடன் இருந்த போதும் இறுமாப்பும்
நெஞ்சு வைராக்கியமும்
சுருங்கவும் இல்லை நரைக்கவும்
இல்லை கணவன் மனையியின் வாழ்க்கையும் எப்படி வாழவேண்டும் என்பதை
கற்று தந்து விட்டு கடவுளான
தந்தையே நீங்கள் தான் எனக்கு முன்னுதாரணம்...!!!

எழுதியவர் : (1-Feb-14, 11:25 am)
பார்வை : 99

மேலே