ஸ்தலபுராணமும் இதிகாசக் கதைகளும்

தவளைச் சத்தமும்
ஈசலின் படையெடுப்பும்
மழை காலத்து
மாறாத சொத்து
காமக் குளங்களும்
கற்பனை கதைகளும்
கடவுள் இதிகாசத்து
கசப்பான வித்து

மூக்கு கண்ணாடி வாங்க காசில்லை
மூன்று லட்சம் ரூபாய் அனுப்புங்கள்
பாக்கு வெட்ட குறடு இல்லை
பத்து லட்சம் ரூபாய் அனுப்புங்கள்

இப்படித்தான் இருக்கும் ஸ்தல புராணம்
இந்தநாள் இன்னதியதி என்றில்லா புராணம்
வாலுமில்லாமல் தலையுமில்லாமல்
வாய்மையற்ற புராணம்

முன்னோர் படித்தனர் ~~முன்னொரு காலத்தில் ''
பின்னோர் படித்தனர் ``முன்னொரு காலத்தில் ''
இருப்போரும் படித்தனர் ``முன்னொரு காலத்தில் ''
யாரேனும் அறிவீரோந்த ``முன்னொரு காலத்தில்''

இந்திரன் ஒருவன் மட்டும்
மோட்சம் பெற்ற இடங்கள்
இங்கு ஏராளம் உண்டு
ஆதாரம் ஏதுமுண்டா
என்று கேட்டவரை
அடித்து கொன்றதும் உண்டு

தேவனிலும் பாவியுண்டு
பாவியிலும் தேவனுண்டு
சொர்க்கம் நீசொல்லியது போல் மேலே இல்லை
நரகமது நீ சொல்லியது போல் பூமி இல்லை
சொர்க்கமும் நரகமும் நம்வசமே -மனிதா
சொல்லிலும் செயலிலும் நடந்திடுமே

எழுதியவர் : சுசீந்திரன். (2-Feb-14, 9:18 am)
பார்வை : 52

மேலே