இழப்பு
தாயின் கருவறையை போல்தான்
கல்லறையும் ...இழந்தது
இதயத்துடிப்பை மட்டுமே!
கற்றுத் தேர்ந்த பண்டிதனை போல்தான்
பாமரனும்...இழந்தது
கல்வியை மட்டுமே!
களங்கமற்ற காவியத்தை போல்தான்
கவிதையும் ...இழந்தது
யதார்த்தத்தை மட்டுமே!
துணையற்ற கன்னியை போல்தான்
விதவையும் ...இழந்தது
தாலியை மட்டுமே!
பண்டைய இதிகாசத்தை போல்தான்
இருபதாம் நூற்றாண்டும் ...இழந்தது
பண்பாட்டை மட்டுமே!