இதயத்துடிப்பு
அன்னை அழைக்க
என்னவென்று கேட்கிறாய் ...
பூக்களை நுகரும் வண்டின் சத்தத்திற்கும்
திரும்பிப்பார்க்கிறாய்....
புல்லாங்குழலையும் உன் குழல்
ஒதுக்கி ரசிக்கிறாய்....
அப்படி இருக்க
உன் பெயர் சொல்லி வலிமையாக
என் இதயம் துடிப்பது
இன்னும் உன் செவிகளை
அடையாமல் போனதெப்படி????