கிரிக்கெட்டிக்காரன்

கிரிக்கெட்டின்
விளாசளும் நீதான்!
விலாசமும் நீதான்!

மட்டம் வைத்து அளந்தால்
மட்டுமே நீ குட்டை.

உன் மட்டையை வைத்து அளந்தால்
நீ சிகரம் தொட்ட நெட்டை.

நீ
விண்ணுக்கு அனுப்பிய
சிக்ஸர் பந்துகளெல்லாம்
வின்மீன்களாகிவிட்டன சச்சின்!

24 வருடங்களாய் நீ
மைதானத்தில் அவுட் ஆகி
பாத்திருக்கிறோம்.
இன்றுதான்
மைதானமே (மூட்)அவுட்ஆகி பார்க்கிறோம்.
ஆம் சச்சின்,
போர் நடந்தால்தான் அது களம்!
இல்லயேல் அது வெறும் பொட்டல் வெளி!
உன் சரித்திர கதவில்
In / Outபோர்டு
மாட்டப்பட்டுள்ளது.
ஆம் SachOut தானே!

உன் புகழ் பாடியவர்களே
சகாப்தம் ஆகும் போது
நீ மட்டும் எப்படி...?
உன்னை
மகாசகாப்தம் என்றே அழைக்க வேண்டும் !

ஒரு வானத்தை தோண்டி
இன்னோர் வானம் எப்படி அமைக்க
ஒரு கடலை பெயர்தெடுத்து
இன்னோர் கடல் எப்படி ஊற்ற..
உனக்கு நீயே நிகர்!

ஆம்
வானத்தின் விஸ்தாரத்தையும்
கடலின் விசாலத்தையும்
அளக்க வல்லது உன் சாதனை!

கிரிக்கெட்டுக்கு மட்டுமில்ல
விளையாட்டுக்கே நீதான்
முதல் மற்றும் ஒரே பாரத ரத்னா!

விளையாட்டில் சாதித்தவர்கள் பலர்
சாதனையில் விளையாடியவன்
நீ ஒருவனே!

எழுதியவர் : வதூத் (3-Feb-14, 1:50 am)
பார்வை : 335

மேலே