முகநூல்

கவிகளின் கற்பனைகள்
கருத்தரிக்க.
கனினிதாயின் ....
கரு..முகநூல் மேனியில் ..
கவிஞர்கள் ..இருபாலாரின்
கருத்தடை செய்யா
சிசுக்களை சுமக்கிறது! முகநூல்!

கால சுமைகளை
பூமி சுமப்பது போல்..
கலாச்சார முறையில் ..
கணினி தளத்தில் ..
முகநூல் உறவுகள்!

சகோதரத்துவம் ..
மதிக்கப்படும்...
மனிதாபிமானம் ...
மறுபிறவி யெடுக்கும்...
மனிதகுலம் ...

காதலை தாண்டி ..
காதலர்களை தாண்டி..
கண்ணியம் காக்கப்படும் ...
மனித நேயமிக்க முகநூல்..

உணவில் சுவைகள் ..பல.
உதடுகள் சுவைப்பதோ ..சில!
உணர்ச்சிகளும் உணவு போல்..
உதடுகள்தான் ...முகநூல்!

ஆலயமில்லா கனினியெனும் ஊர்..
அதில் மனிதம் மட்டுமே உயிர்..!
மதங்களை கடந்து ...
முகங்களை நேசிக்கும்..தென்றல்..
தாய் தண்டிப்பதில் உண்டு அன்பு..
தோழன் தண்டிப்பதில் உண்டு நட்பு..

முகநூலில் முகவரிகள் ..
முதல் வரியாய்...நண்பர்கள்!
முகம் பார்க்கா முகங்களின்
முதல் விடியல் -தினசரி
இதழ்களின் ...இனத்தவர்கள்!

பாட நூல் யில்லா
கல்வியரை யிது..
கல்லூரி யெனும் கணினியில்
" முகநூல் யிது"

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (3-Feb-14, 2:08 pm)
சேர்த்தது : sarabass
Tanglish : muganool
பார்வை : 73

மேலே