காதல் விழிகள்
கெஞ்சி கெஞ்சி விழிகள் தேடும்
உந்தன் முகம் பார்க்க தானே ....
அஞ்சு நொடி பார்வை வேண்டி
ஏக்கம் கொள்ளும் எந்தன் இதயம் ....
காற்றிலே பரவும் மனமாய்
காதல் என்னுளே பரவ
அன்பே ! .... அன்பே ! .... அன்பே ! ....
கண்ணில் வந்த காதலோ
கனி என ஆனதோ ...
என்றும் உன் விழியை
பாடும் என் கவிதைகள் ....
கெஞ்சி கெஞ்சி விழிகள் தேடும்
உந்தன் முகம் பார்க்க தானே ....
அஞ்சு நொடி பார்வை வேண்டி
ஏக்கம் கொள்ளும் எந்தன் இதயம் ....
உன் விழி போல ஓர் விழியை தேடினேன்
எந்தன் தேடல் போய்யாச்சு ...
பெண்ணவள விழிகளில் சக்திகள் உள்ளதை
உந்தன் விழியில் நான் கண்டேன்
ஆசை விழிகள் பார்த்தேன் - அதில்
ஆசை நூறு தீர்த்தேன்
நாணம் விழியில் பார்த்தேன் - அதில்
பெண்மை கண்டு கொண்டேன்
கண்கள் அது கண்களோ .......
காதல் தந்த கண்களோ .....
என்றும் உன் விழியை
பாடும் என் கவிதைகள் ....
கெஞ்சி கெஞ்சி விழிகள் தேடும்
உந்தன் முகம் பார்க்க தானே ....
அஞ்சு நொடி பார்வை வேண்டி
ஏக்கம் கொள்ளும் எந்தன் இதயம் ....