கள்ளிப் பூவிலும்

கள்ளிப் பூவிலும்.......

கள்ளிப் பூவும் தேன் சுரக்கும்.
உள்ளிருந்தும் தான் அழைக்கும்
சொல்லும் வகை மணம் இழுக்கும்
அள்ளி உண்ண வண்டு தேடும்.

முள்ளிருக்கும் பூக்கள் எல்லாம்`
முடிந்து இனம் அழிவதில்லை.
சொல்வலிக்கும் காதல் தானே
முள்விலக்கி இதழ் விரிக்கும்.

இரவெல்லாம் காத்திருக்கும்
உறவுக்காக விழித்திருக்கும்.
விடிந்ததும் பூத்திருக்கும்.
படர்ந்த பனி உதிர்த்திருக்கும்.

காரணங்கள் இல்லாமல்
காரியங்கள் நிகழ்வதில்லை.
தோரணங்கள் முயலாமல்
தூரமானால் விளக்கமில்லை .

நேரம் உண்டு காலம் உண்டு
நிகழ்வுக்குப் பொருத்தம் உண்டு.
ஆறுவதால் ஆறாது.
அது விளையப் பருவம் உண்டு.

பதறினால் சிதறிவிடும்.
உதறினால் உதிர்ந்துவிடும்.
நினைத்த காதல் நெஞ்சிலிடு
நிதானமாய் தேடியெடு.

கொ.பெ.பி.அய்யா.

.
பொருள் :
தோரணம் =ஆதாரம்.
.

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா. (3-Feb-14, 3:39 pm)
Tanglish : kallip poovilum
பார்வை : 75

மேலே