ஆசிரிய விருத்தம் 1

வாய்த்திட்ட இவ்வாழ்வில் வளமான கல்வி
வானத்தின் மீன்களென வற்றாது நிற்கும்
தேய்ந்துவளர் நிலவெனவே செல்வமென்ற ஒன்று
தேய்ந்துபின் வளருமொரு நிலைநிற்ப தில்லை
ஆய்ந்திட்டால் மின்னைப்போல் அவசரமாய் வாழ்வும்
அற்றுவிழும் அகிலத்தே அண்டாது போகும்
மாய்க்கவரும் கூற்றுவரும் முன்வாழ்வில் ஈயும்
மனங்கொண்டால் வானமெனப் புகழ்நிற்கும் கண்டீர்!

எழுதியவர் : அகரம் அமுதன் (3-Feb-14, 7:48 pm)
பார்வை : 83

மேலே