ஆசிரிய விருத்தம் 2

வற்றாத ஆறெனவே வடிவியர்வை கொண்டு
வாழ்வென்னும் கலைகொண்ட வறுமையழுக் கத்தை
முற்றாகப் போக்கிவிட முடியுமென நம்பி
முதுகைவளைத் துழைப்பார்தம் உழைப்பிற்குக் கூலி
சற்றேனும் குறையாமல் தாராதே மாற்றித்
தான்மகிழ தன்வாழ்வும் தானுயர எண்ணுங்
கற்றூணே போற்கடின மனம்படைத்தார் செல்வம்
கானல்போல் உயர்ந்தாலும் கடுமழையாய்த் தாழும்!

சொற்பொருள்:-
கலை -ஆடை

எழுதியவர் : அகரம் அமுதன் (3-Feb-14, 7:49 pm)
பார்வை : 72

மேலே