நவீன வாழ்க்கை

நாகரிக மோகத்தில் மூழ்கி,
நாவடக்கம் தொலைத்து ,
நன்றி கெட்ட மாந்தராய்
பெற்றோரை தனியே விட்டு
நெறியற்ற வேகத்தோடு
நிம்மதியின்றி ஓடுகிறோம்....
நின்று திரும்பிப்பார்த்தால்
நிராதரவாய் நிற்பது நாமல்ல
பின்வரும் நம் சந்ததிகளே...
உணர்ந்து செயல்பட்டால் மட்டுமே
உருவாகும் " நல் இந்தியா"

எழுதியவர் : சஹானா (3-Feb-14, 8:50 pm)
பார்வை : 112

மேலே