வெளிநாட்டில் வேலை
வீட்டில் நினைத்ததால் வந்தது விக்கல்
என்று தண்ணீர் குடிக்க மனமில்லை,
கணினித்திரையே விழித்திரையாம்
எங்களவர்களின் முகத்திரை காண,
பிள்ளையிடம் அறிமுகம் செய்யும்
நற்தந்தை நாங்கள்தாம்,
நிலவொளி அன்றி அனைத்தையும்
காண்கிறோம் கானொளியில்,
கண்ணீர்த் துளிகளுடன்
வெளிநாட்டில் வேலை...
-செல்வக்குமார் சங்கரநாராயணன்