அன்னைக்கு அனாதை இல்லமா

பத்துத் திங்கள் சுமந்ததற்க்க்காகப்
பாசம் காட்ட வேண்டாம்,

உதிரம் உதிர்த்துப் பாலூட்டிய
என்னைச் சீராட்ட வேண்டாம்,

உணை எண்ணி இறைவனடி சேரும்
எனை முதியோர் இல்லத்தடி சேர்க்காதே ,

அம்மா என்று அழைக்காவிட்டாலும்
அனாதை இல்லத்தில் விட்டுவிடாதே........

நடை பழகிக் கொடுத்த எனக்கு
இடம் கொடுப்பாயா நடைபாதையிலாவது,

வேண்டுகிறேன் உன் மகனை
பொறுப்போடு வளர்ப்பாயாக
இல்லையேல் இதேநிலைமை
அவனால் உனக்கும் வருங்கலத்தில்..

-செல்வக்குமார் சங்கரநாராயணன்

எழுதியவர் : செல்வக்குமார் சங்கரநாராய (4-Feb-14, 1:32 am)
பார்வை : 89

மேலே