குண்டு வெடித்தது

குண்டு வெடித்தது குண்டு வெடித்தது
கோவில் வாசலிலே
உண்டும் குடித்தும் ஊண்வெறி வழிந்து
குண்டு வெடித்ததுவே.

ஆசை மனைவியை அணைத்து வந்தவர்,
வாசற் படியினில் பிச்சை கேட்டவர்,
நாசம் நடக்குமென துளியும் எண்ணாமல்
தேசம் சுதந்திரமென நம்பி நடந்தவர்

நண்டும் சிண்டுமாய் நாலுபேர் கொண்ட
குடும்பத் தலைவன், கிழவியர் அன்றி
பெண்டுகள் பிள்ளைகள், போகட்டும் பாவம்
என்றெதும் பாராமல் -அம் மாலையில்

குண்டு வெடித்தது குண்டு வெடித்தது
கோவில் வாசலிலே

பையது கொண்டு போகும் பாமரர்தம்
கையைப் பிடித்தார்கள்
“கையறு “ நிலையில் கையை விரித்திட
சினந்து சிரித்தார்கள்

கொண்டவன் கொடுத்தவன் கூடிப் பேசிட
கோவிலில் படுத்தார்கள்
கோலங்கள் ஓலங்கள் என்றே ஒப்பாரியை
மொண்டு நனைத்தார்கள்

அண்டை அயலார்க்கு நாங்கள் செய்யும்
தொண்டிது என்றார்கள்
அங்கும் இங்கும் குண்டு இருப்பதாய்
விண்டு விவரித்தார்கள்

அங்கே சிலது இங்கே பலதாய்
கண்டு பிடித்தார்கள்
குண்டு வெடித்தது குண்டு வெடித்தது
கோவில் வாசலிலே
.

மெய்யது சொல்லி மேனியில் வழியும்
வேர்வை துடைத்தார்கள்
பெய்வது மழையல்ல குண்டு மாரியென
மெய் விதிர் விதிர்த்தார்கள்

குண்டு வெடித்தது குண்டு வெடித்தது
கோவில் வாசலிலே

எழுதியவர் : தா. ஜோ. ஜூலியஸ் (4-Feb-14, 12:49 pm)
Tanglish : kundu vedithathu
பார்வை : 69

மேலே