நவீன கவிதை
அன்பே !
உயிரே !
தேவதையே !
இதயமே !
செல்லமே !
நிலவே..!
பூவே...!
இப்படி இப்படியாக
கால காலமாய்
காதலியை அழைத்தே
அலுத்துவிட்டது
தமிழ் கவிதைகள்.
எப்படி எப்படியாக
காதலியை நவீனமாய்
அழைக்கலாம்..!
யோசித்தேன்
எழுதினேன்
என்னவளுக்கு ஒர் கவிதை !
தொடுதிரையே...!
மோகம்கொண்டு
தீண்ட தீண்ட
ஏங்குகிறதே
என் விரல்கள் !
தொட்டுவிட தொட்டுவிட
மயங்குமோ
உன் அங்கங்கள் !
துணைக்கோளமே !
ஏவூர்தியாய் உனை
ஏந்த காத்திருக்கிறேன்.
விரைவில் வா
விண்வெளி பூங்காவில்
உலாவி மகிழ்வோம்.
கணினியே..!
இணையதளத்தில் காதல்
குறியீடுகளாய் அலைகிறேன்.
இணக்கி கொண்டு
என்னை ஏற்றுக்கொள்ளடி.
வண்ணத்திரையில்
இன்பம் காண்போம்..!
[[சிறிய முயற்சிக்காக எழுதப்பட்டது
பொருள் பிழை என்றால் மன்னிக்கவும்]]