விவசாயம்ன்னு ஒன்னு இருக்கா

பிற சாயம் கலந்ததால் என்னவோ
விவசாயம் வெளுக்காமல் போனதோ ?

விளை நிலங்கள் தன் மதிப்பைக் கூட்ட
விலை போய் வீட்டுமனை ஆனதுவோ?

காணி நிலம் வேண்டும்
எனப்பாடிய பாரதி இன்றிந்தால்
பாடியிருப்பான் போலும் நிலமிருந்தால்
காணி வேண்டும் என்று

விம்மி அழுகின்றனர்
விவசாயிக்குழந்தைகள்
மேகத்தாய் அழ மறுத்ததால்

அடுத்த ஆண்டு உணவுக்கு ஏரிடும்
இதே பூமியில் தான்
அடுத்த வேளை உழுவதற்குப் போரிடும் அவலம்....

-செல்வக்குமார் சங்கரநாராயணன்

எழுதியவர் : செல்வக்குமார் சங்கரநாராய (4-Feb-14, 9:17 pm)
பார்வை : 72

மேலே