சந்தேகம் வேண்டாமே
எண்ணத்தில் இது கலந்தமையால்
எண்ணற்றோர் இழந்தனர் வாழ்வை ,
பிரிவைப் பரிசாக
அளிக்கவல்ல சந்தேகம்
புனிதமான அன்பை
புரிந்து வாழ விடுவதுமில்லை ,
பாலும் கல்லாகும்
கயிறும் பாம்பாகும்
வார்த்தையோடு தொடுக்கின்ற
சொல்லே அம்பாகும்,
வலிகளின்றி இதயத்தை
கூறுபோடும் கத்தியின்றி
உண்மைக்கு தீமூட்டி
மகிழ்ச்சியை மரணிக்க
வைத்து குளிர்காயும்
சிந்தனை சிதறி
கடிவாளம் இழந்து
அழைத்துச் செல்லும்
துன்பத்தின் பாதளம் வரை
வளமான வாழ்வு தனை
வேரறுக்கும் சந்தேகம்
வேண்டாம் நமக்கு
புரிவால் முறிப்போம் பிரிவை
-செல்வக்குமார் சங்கரநாராயணன்