கடிகாரம்

இன்றைய உலகில் நான் இல்லாமல்
எந்த மானிடரும் இல்லை.
எல்லா வடிவிலும் நான் அவர்கள் வசம்.
நாளின் தொடக்கம் முதல் முடிவு வரை
என்னை சார்ந்தே அவர்கள் வாழ்க்கை ஒடுகிறது.
தப்பித்தவறி நான் நின்று விட்டால்
சகலமும் குளறுபடிதான்.
இரவில் என்னை நம்பித்தான் அவர்கள்
கண்களையே மூடுகிறார்கள் என்றால்
பார்த்துக் கொள்ளுங்களேன்.
அவர்களுக்கு விடிகாலை சுப்ரபாதமே
என் குரல் தான்.
என்ன சொல்லி என்ன பயன்
நான் உயிர் பிச்சை அவர்களிடம்
அல்லவா கேட்க வேண்டியிருக்கிறது.
என்னோடு போட்டி போட்டுக்கொண்டு
அவர்களும் செயற்கை இதயம்
பொருத்திக் கொள்ள தொடங்கி விட்டார்கள்.
இது தான் கலிகாலம் என்பது.