இப்பிறப்பில் நற்பணிகள்

இப்பிறப்பில் நற்பணிகள் நான்ஏதும் செய்திருப்பின்
அப்பணியின் பொற்பலனை இப்பிறப்பில் தந்துவிடின்
தாயே யுன்பொற் பாதம் தொட்டுன்னை
போற்றிடு வேன்எந்நா ளும்
வாழ்நாளில் வஞ்சனைகள் செய்திருப்பின் இப்பிறப்பில்
ஏழ்பிறப்பும் கொடுத்தென்னை ஏளனம் செய்யாமல்
இப்பிறவி ஒன்றோடு உய்வித்து வைத்துவிடின்
அப்பா ! போற்றிடுவேன் எந்நாளும்