கைலாசபுரியில்
கை எதற்கு எல்லாம்
கை என்னவெல்லாம்
கை சைகை என்போம் .
எழுத கை
எழுத்துக்கு கை
எழுவதற்கு கை .
உண்ணக் கை
உணவுக்கு கை
உட்படுத்தவதற்கு கை .
கட்ட கை
கட்டுவதற்கு கை
காட்டுவதற்கு கை .
கை வேலை
கைக்கு வேலை
கையூட்டும் வேலை
கை நீட்டி
கை யை அடியில்
கை கொடுத்து
கையொப்பம் இடாமல்
கை மேலே வராமல்
கைக்குள்ளே .
இடது கையில் வாங்கி
வலது கைக்குத் தெரியாமல்
கை மேலே வாங்கி .
கை காட்டி
கையோடு செய்து
கை குலுக்கும்.
.
கையாட்கள் நிறைந்த
கைலாசபுரியில்
கை கூப்பி நிற்கும்
கை இல்லா ஆசாமி.
.