திருந்துவோம் சகோதர சகோதிரிகளே

அவனும் அப்படித்தான் !
அவளும் அப்படித்தான் !
திருநங்கைகளும் திமிர்பிடித்தலைகின்றனர்,
மொத்தத்தில்
மனிதன் மனிதனாக இல்லை
சமூகம் சமூகமாக இல்லை
சாக்கடையாகிவிட்டது!!!

பெற்ற சுதந்திரத்தை
விற்ற பாவிகள் நாமெல்லாம்
ஆம்,
நாம் பெற்று விட்டதாக நினைக்கும்
சுதந்திரத்தை இந்நாட்டு அரசியல் வாதிகளிடம்
விற்று விட்டோம்
ஒரு ஓட்டுக்கு 100 ரூபாய் விகிதத்தில்!!!

நாட்டில் ஊழல் உல்லாசமாக
உலா வருகின்றது !
அது கருப்பு பணம் என்பதினால் காந்தி
அழவில்லை ! அதிலும் சிரிக்கிறார் !
அஹிம்சைவாதி ஆயிற்றே???

எங்கு நோக்கினும், தவறுகள் தலைவிரித்தாடுகின்றன !
தட்டி கேட்க ஆளில்லாமல்....

மது ! மாது ! இவை தான் வாலிபத்தின்
கடமை எனக் கருதுகிறான்...
ஆணுக்கு-பெண் சளைத்தவர்கள் அல்ல
குடிப்பதிலும் கூத்தடிப்பதிலும்...
இது நாகரிக முனேற்றத்தின் விளைவு...

மனிதன் நிர்வாணமாக திரிந்தபோது கூட
நாகரிகம் நன்றாகதான் இருந்தது
நாகரிகம் என்பது
உடுத்தும் உடையில் இல்லை
நடக்கும் நடத்தயில்தான் இருக்கிறது
இதை உணராமல் உலகம்
ஏன்? இப்படி இருக்கிறது !

காம வெறிகொண்ட காட்டேறிகள்
வாழும் நாட்டில்
கற்பழிப்புக்கு பஞ்சமே இல்லை...
இந்தியர் அனைவரும் உடன் பிறப்புகள்
என்பது வெறும் உதட்டளவில் உச்சரிக்கப்படும்
உறுதிமொழிதான் போலும் ???

வேசிகளை போல வியாபாரம் ஆகின்றதே
விளைநிலங்கள்.......ஐயோ இனிமேல்
விவசாயமும் கேள்விகுறிதான்????

காய்ச்சலுக்கு கனிமாரு செய்யும் அவன் மூடநம்பிக்கையில் மூழ்கி
மூச்சடைத்து இறக்கிறான்.....

திருந்துவோம் சகோதர சகோதிரிகளே திருந்துவோம்

இன்றைய சமூகத்திற்கு தேவை
மாறுபட்ட சிந்தனையும்
அதை செயல்படுத்தும்
முயற்சியும் தான்.... தவிர,
மனிதநேயமற்ற செயல்களோ
அல்லது
மாற்றான் குடி கெடுக்கும்
எண்ணங்களோ அல்ல !
வாழ்க பாரதம்

------------------------அருணன் கண்ணன் ---------------------

எழுதியவர் : அருணன் கண்ணன் (7-Feb-14, 10:47 am)
சேர்த்தது : அருணன் கண்ணன்
பார்வை : 144

மேலே