பாட்டி நீ வாரியா

பாட்டி நீ வாரியா!!
பாட்டி தூரம் போறியா?
கூட்டிப் போறேன் வாரியா?
லூட்டிப் பையன் நானுயா
ஊட்டிப் போலாந் தானுயா!
ஊட்டியின்னு சொன்னதும்
பாட்டி பயந்தோடுறா!
“ஈட்டி மல உச்சியில்
என்னப் புடிச்சி தள்ளவா?
போடா போடா புண்ணாக்கு
புரிஞ்சு போச்சு உன்னோக்கு
ஆள விடு சாமிடா !நான்
ஆளப்போற பொண்ணுடா!”
ஊட்டியின்னு சொன்னாலே!
ஓடுறாங்க பொண்ணுங்க .
பார்ட்டி இவன் பழிவாங்க
பாக்குறான்னு அஞ்சுறாங்க .
பாட்டி உசார்தான் வடை போச்சே!
ஊட்டி போற ஆச ஊசிப்போச்சே!
பாட்டியின்னு சொல்லாதே!
போட்டி போட்டு அடிப்பாங்க!
கொ.பெ.பி.அய்யா.