காதலென்னும் சோலையினில்52

ராஜா அந்த போலிஸ் அதிகாரியை பார்க்க கிளம்பினான்.
அப்போது கவிதாவை மெல்ல அழைத்து அங்கு நடந்த விபரங்களையும் தாராவின் மீதுள்ள சந்தேகத்தையும் சொன்னான்.



என்னங்க! இது எனக்கு ரொம்ப பயமா இருக்குது, தாரா ஏதாவது செய்து விடுவாளோ? அவள் எதற்கும் தயங்க மாட்டாள், அவளுக்கு என்மேல் தானே கோவம் என்னை பழி வாங்கியிருக்கலாமே?



ஐயோ! என்னை பழிவாங்குவதாக நினைத்து அவளை பழிவாங்க போகிறாள் என்று கவிதா அலுத்து புலம்பினாள்........


வேணும்னா நான் போய் தாராவிடம் பேசி பார்க்கட்டுமா? என்று தழுதழுத்த குரலில் ராஜாவிடம் கேட்டாள்!


என்ன நீ! புரியாமல் பேசுகிறாய், தாராதான் தப்பு பண்ணினான்னு நான் சொல்லவில்லை அவள் மேல் சிறு சந்தேகம் அவ்வளவு தான்,,,,,,,,,


நீ ஓய்வு எடுத்துக்கொள் நான் அந்த போலிஸ் அதிகாரியை அழைத்து அவளின் வீட்டைக்காட்டி கொடுத்துவிட்டு வருகிறேன், நான் சொன்னதை வீட்டில் யாரிடமும் சொல்லாதே என்று சொல்லிவிட்டு சென்றான்....................



அங்கு அந்த போலிஸ் அதிகாரி அந்த கொலைக்கேசில் இருப்பவனை பின் தொடர்ந்து சென்று கொண்டிருந்தார். அதை அவன் கவனிக்கவில்லை திடீரென்று ஒரு பூத்தில் போய் யாரிடமோ போனில் பேசிக்கொண்டிருந்தான்.............



நேரம் செல்ல செல்ல அவன் வெளியில் வரவில்லை சரி அதிகநேரமாகி விட்டது இவனை இன்னொரு நாள் பார்க்கலாம் இப்போது ராஜாவின் தங்கை பற்றி விசாரிக்க செல்லலாம் என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினான்...........



கவிதாவின் வீட்டில் அனைவரும் சோகமாக இருந்துகொண்டிருக்க கவிதாவின் மனம் கவலையுடனும் ஒரு உறுத்தலுடனும் காணப்பட்டது பாவம் ராஜலெக்ஷ்மி நமக்காக இவ்வளவு கஷ்டப்பட்டாள் இப்போது அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை நம்மளால் ஏற்படுத்திக்கொடுக்க முடியவில்லையே என்று அழுது கொண்டு தன் இஷ்ட தெய்வத்திடம் மனதில் வேண்டிக்கொண்டாள் இன்னிக்குள்ளால ஒரு நல்ல தகவல் கிடைக்க வேண்டும் என்று................





அப்பொழுது தொலைப்பேசி அழைக்கவே கவிதா எழுந்து சென்று போனை எடுத்தாள், பிரசாத் தான்!!!!!!!!!!!!


ஹலோ! என்றவள் பிரசாத்தின் குரலை கேட்டதும் என்ன சொல்வதென்று யோசித்துக்கொண்டிருந்தாள்?????????


அதற்குள் அவனே "கவிதா இந்த கேஸ் முடிஞ்சதும் இன்னும் 2 நாட்களில் கிளம்பி வந்து விடுவேன்" உன் வீட்டு முகவரியை சொல்லு என்றான் இவ்ளோ நாள் கேட்கவே தோணல? மறந்துட்டேன் sorry கவி என்று சொல்லி வினவினான்..............



அடப்பாவி இதுவரைக்கும் தெரியாதா? சித்தப்பா சொல்லிருப்பாங்கன்னு நினச்சேன் நானும் சென்னை தாண்டா.


அப்டியா! அப்போ எனக்கு சீக்கிரம் வந்திரலாம் தேனிக்கு போய் கொஞ்சம் பொருட்களெல்லாம் எடுக்கணும் எடுத்துட்டு வந்திடுறேன் ........


அப்பா, அம்மா உன் வீட்டுல தானே இருக்காங்க? சென்னையில் முகவரி என்று பிரசாத் கேட்டான்?


ஆமா! சித்தப்பா சித்தி இங்க தான் இருக்காங்க சென்னையில கோடம்பாக்கம் சிவன் கோவில் பக்கத்து வீடு என்று சொல்லிகொண்டிருக்கும் போது லைன் கட் ஆனது..............



ஹலோ!ஹலோ என்று கேட்டு விட்டு பதில் இல்லாததால் தொலைப்பேசியை கீழே வைத்துவிட்டு போய் கட்டிலில் சரிந்தாள் கவிதா கடவுளை மனதில் நினைத்துக்கொண்டு.............கண் அயர்ந்தாள்.



ராஜா அந்த போலிஸ் அதிகாரியின் வீட்டை அடைந்தான் வீடு பூட்டியிருக்க வெளியில் அந்த தோட்டத்திலிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டான்...........


அந்த திருடனை இன்னொரு நாள் பார்த்துக்கலாம் என்று நினைத்த போலிஸ் அதிகாரி அங்கிருந்து கிளம்பும் போது! போனில் பேசிக்கொண்டே நடந்தார்,,,,,,,,,,,,,,,,




திடீரென திரும்பும் போது பூத்தில் நின்ற அவனைக்காணவில்லை???


அப்பொழுது அவரது பின் பக்கத்திலிருந்து ஒரு பெண் ஓடி வந்த இந்த அதிகாரியின் மேல் மோதி நிலை தடுமாறி கீழே விழுந்தாள் இவரது கையிலிருந்த செல்போனும் கீழே விழுந்தது...............



இதை எதையும் கவனிக்காமல் எழும்பி ஓட முயற்ச்சித்தாள் அந்த
பெண்????????????????







தொடரும்..........

எழுதியவர் : (7-Feb-14, 3:57 pm)
பார்வை : 235

மேலே