இருளாய் இருப்பதனால்

வாழ்க்கையின் விடிவெள்ளி - என்ன
என்று தெரிந்திருந்தால்
தேடியிருக்கலாம் இந்த
இருள் வானில் !
கிடைத்த முத்துக்கள் நன்று
எனில் கூறியிருக்கலாம்
கோடி வந்தனங்கள் - அந்த
ஆழ்கடலுக்கு !
நினைவுகளில் நீந்தும்
மனித கனவுகளுக்கு
வெளிச்சம் வந்திருக்கும்
விழி இருந்திருந்தால் !
தேடலே வாழ்க்கை எனில்
தேடியதெல்லாம்
கிடைத்திருக்கலாமே !
தனிமையின் கொடுமையில்
கருகி சாகும் - இனிய
இதயங்களின் தவிப்புகள்
தந்திடுமோ மனவலிமை !
யாருமின்றி அனாதையாய்
அலையும் மனித மனங்களில்
தெளிப்பவர் யாரோ
அரவணைப்பு என்னும் பன்னீரை!
அன்பு என்ற ஒன்றை
அறிவது எப்படியோ
விடியும் என்ற நம்பிக்கை
இழந்து விட்டது
இந்த ஊமை உலகில் !
மனித மனங்கள் என்றுமே
இருளாய் இருப்பதனால் !

எழுதியவர் : அனந்திகா (7-Feb-14, 4:05 pm)
பார்வை : 65

மேலே