அழிவற்ற நித்திய ஜீவன்

வெள்ளை
நிற ஓவியம் நிஜமற்ற
நிழலை துரத்தி
வெகு
விரைவாக
தொடர்கிறது

உருவத்தை
கண்டு மயங்கும்
உள்ளம் இதயத்தை
காண
மறுத்திடுமா..!

இதயத்தை
கண்டு மயங்கும்
உள்ளம் நினைத்ததை
நினைக்க
மறுத்திடுமா..!

அறியாமை
என்னும் மாயை
அறிவுள்ள
அறிவுகளை அறிவற்ற
அறிவுகளாக
அறிந்தும்
புரிந்தும்
நடக்கிறதே...!

தெரியாமல்
வாழும் உள்ளம்
அழிவுள்ள
அழிவுகளை அழிவற்ற
அழிவுகளாக
தெரிந்தும்
நினைத்தும்
நடிக்கிறதே..!

ஒழிந்து
கொள்ளும் நிழலை
கண்டவர்க்கு
தன் உருவம்
தனது என புரியாமல்
போன காரணம்
ஏனோ..!

ஒரு நாள்
பிறக்கும் உண்மை
நிலை விளங்கும் - நீ
அழிவற்ற
நித்திய
ஜீவன் என்று...

எழுதியவர் : லெத்தீப் (7-Feb-14, 8:16 pm)
பார்வை : 98

மேலே