பெண்களின் உயிரைத் துச்சமாக மதிக்கும் அரசு

பெண்களின் உயிரைத் துச்சமாக மதிக்கும் அரசு
------------------------------------------------------------------

நண்பர்களே, இருசக்கர வாகனங்களில் பயணிப்போர், ஹெலமட் அணிய வேண்டியதைக் கட்டாயமாக்கிய அரசை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். அதுவும் ஆங்காங்கே ஹெலமட் அணிய வேண்டிய அவசியத்தை விளக்கும், விளம்பரங்களைப் பார்க்கும் போதெல்லாம், அரசாங்கத்திற்கு, நமது உயிர் மீது இருக்கும் அக்கரை நம்மைப் புல்லரிக்க வைக்கும்.

ஆனால் இந்த விஷயத்தில் ஒரு பெரிய ஓட்டை.

ஹெலமட் அணிவது பெண்களுக்கு கட்டாயமில்லையாம். ஆண்களின் பாதுகாப்பில் அக்கரை காட்டும் அரசாங்கத்திறகு, சமுதாயத்தின் அச்சாணியாக விளங்கும் தாய்குலங்களின் உயிரின் மீது ஏன் இந்த அலட்சியம் ? அவரகளின் உயிர் அவ்வளவு முக்கியமற்றுப் போய்விட்டதா ?

பெண்களின் பாதுகாப்பையும், அவர்களின் உயிரையும் துச்சமாக மதிக்கும் அரசாங்கத்தையும், இந்த விஷயதத்தில் வாய்மூடி மௌனியாக இருககும், போலி பெண்ணியவாதிகளையும் வன்மையாக கண்டிக்கிறேன்.

எழுதியவர் : முரளிதரன் (8-Feb-14, 3:58 pm)
பார்வை : 145

மேலே