காதல் சுகமானது
![](https://eluthu.com/images/loading.gif)
என்னையே நான் பார்த்து
பல நாட்கள் ஆனதே...
கண்ணாடியும் என் முகம் மறந்து
உன் முகத்தையே காட்டுகிறதே!
நீ நானாக
இல்லை இல்லை...
நான் நீயாக...
அட! அதுவும் இல்லை...
என்னவென்று சொல்வது?
கவிஞர்கள் சொல்வது போல்
காதல் சுகமானது தான்
சில நேரங்களில்...!!