அரசியல்வாதி போலவே அவனும்
செயற்கையாய்
எரியும் விளக்குகளின்
வெளிச்சத்தில்
வீட்டு முற்றத்தில்
அமர்ந்திருக்கிறான் அவன்
வெளியே ஒரே இருட்டு
அவனது ஒவ்வொரு
அசைவும்
இருட்டில் நின்று
பார்க்கும்
ஒவ்வொருவருக்கும்
தெரிகிறது
ஆனாலும்
ஒருவரும் இல்லை
எனும் நினைப்பில்
ஏதேதோ
செய்துகொண்டிருக்கிறான் அவன் !
அரசியல்வாதி போலவே
அவனும்