மூலையில் இருத்தல் தகுமோ
ஆயிரம்பிள்ளையைப் பெற்றாலும்
தாய்கனைத்தும் தலைப்பிள்ளைகளே
வேற்றுமையில் ஒற்றுமை நிறைந்த
இத்தேசத்தில் என்னினழிவை
காக்க கரம்கொடுக்காததேனோ ?
என்னில் ஓரையம் எனக்காக
ஒருசொட்டுக் கண்ணீர்க்கூட
விடாதிதுவா என்தாய்த் திருநாடு ?
உதிரம் சொட்டச் சொட்ட
என்னருகே வந்து யான்
ஈன்றெடுக்கா என்புதவல்னே
இங்கிருந்து சென்றுவிடு
நீயாவது உயிர்பிழையென
கண்ணீர்மல்கக் கூறும்
ஈழத்தாயே என்தேசம்
அதுவேயென் பூர்விகம்
அங்கெ என்மூதாதையர்
மூச்சுக்காற்று உலவுகிறது -அவர்களின்
நடைபாதைச் சுவடுத்தெரிகிறது
வீழ்ந்தாலும் இம்மண்ணிலே
வீழ்வேன் வாழ்ந்தாலும்
என்தாயுடனே வாழ்வேன்
எனவீர முழக்கமிட்டு
நாற்புறம் கடல்சூழந்த
இனிமையான நம்தேசத்தில்
நடுவே நம்தாய் தத்தளித்துக்
கொண்டிருக்கிறாள் காப்பது
நம் கடமையல்லவா ?.....
வீரத்தின் தாயகமாய்
மொழிகளில் முதன்மையாய்
பண்பாட்டு இலக்கியமாய்
பழம்பெருமை மிகுதியோடு
தாய்க்கெல்லாம் தாயான
தமிழோடு ஒற்றுமையாய்
தலைநிமிர்ந்து வாழவேண்டிய
நாம் இந்தியன் என்றபெயரில்
எங்கோ ஓர்மூலையில்
இருத்தல் தகுமோ ..?