மெய்யுணர்தல்

மெய்யுணர்தல்
**********************
[ பொருள்அல்ல வற்றைப்
பொருள்என்[று] உணரும்
மருளான்ஆம் மாணாப் பிறப்பு.
[ திருக்குறள் 0351 ]

எனக்குள் இருக்கும் என்னை--
என்றும்யான் பார்த்தது இல்லை---
என்னை எனக்குத் தெரியாது---
என்னிடம் எதுவும் இல்லைஎன
எண்ணிப் பார்த்ததும் இல்லை---
எத்தனையோ எனக்குத் தெரியாது---
எதுவும் தெரியாது என்றே
என்றும் எண்ணியதும் இல்லை---
என்னையான் நம்புவதும் இல்லை---
ஆரையும் யானும் நம்பவில்லை---
எதையும் முழுதாகப் படிக்கவும்
என்றும் முயன்றது இல்லை---
அதையும் இதையும் அறியாத
எனக்குள் ஆணவக் கொழுப்பு---
என்னை எனக்குப் பிடிக்காது---
ஏன்என்றும் எனக்குத் தெரியாது---
எதையும் கேட்பதும் இல்லை---
எதையும் சொல்வதும் இல்லை---
எனக்கே புரிவதும் இல்லை---
என்னையான் மதிப்பதும் இல்லை---
என்னை எடுப்பாரும் இல்லை---
ஏன்என்று கேட்பாரும் இல்லை---
என்னை ஆருக்கும் தெரியாது---
எனக்குள் இருக்கும் என்னை
எப்போதுயான் அறிந்து கொள்வது?
+++++++++++++++++++++++++++++++++++++

எழுதியவர் : பேராசிரியர் (10-Feb-14, 6:57 am)
பார்வை : 88

மேலே