யார் நீ

முன் தோன்றி
முழுதுமறிந்த
மூடனே!

முன்னம் பல
முனகினேன்...

மூடிய உன் கண்கள்
மூடியே இருந்தன...

மனசுக்குள் உன்னை வைக்க
மாபெரும் யாகம் செய்தேன்...

சூடிய மலர்களெல்லாம்
வாடி விட்டன...

மூத்தோர் பலர்
முயன்றார்...

முற்றும் துறந்து
முனிவரானார்...

முயன்றவ ரெவருனை
முழுதுணர்ந்தார்?

உறக்கமே இல்லையாம்
உனக்கு!
உதவிகள் செய்தல்
உன் குணமாம்!

உரைத்தார் பலர்...

உறங்காமல் கண்மூடி
என்னதான் தவம் செய்கிறாய்?

முன் தோன்றி
முழுதறிந்த
மூடனே!...

மூடிய உன் கண்கள்
திறவாதா?

சூடிடும் மலர்களெல்லாம்
மணக்காதா?

எழுதியவர் : மனோ & மனோ (10-Feb-14, 6:41 pm)
Tanglish : yaar nee
பார்வை : 169

மேலே