ஊமைக்கவிதை
கடந்து போகிறீர்கள்...
விழுந்து கிடக்கிறேன் - சற்றே
கடந்து போகிறீர்கள்...
தூக்கி விட ஆளில்லாமல் கிடக்கிறேன்
தூரம் விலகி - என்னை
கடந்து போகிறீர்கள்...
வலித்து கிடக்கிறேன்
சுகமாய் சிரித்துப் பேசி - என்னை
கடந்து போகிறீர்கள்...
இயலாமல் காய்ந்து போன
இலையாய் கிடக்கிறேன்
இயற்கையென இரசித்து விட்டு - என்னை
கடந்து போகிறீர்கள்...
கசங்கிய காகிதமாய் கிடக்கிறேன்
கண்டும் காணாதது போல் மெதுவாய் - என்னை
கடந்து போகிறீர்கள்...
என்ன செய்ய முடியும் என்னால்?
விழாதது போல்
நடித்து நகைத்து
வாய்ப்பேச்சு ஏதுமில்லா
ஊமைக்கவிதையாய்
கிடப்பதை தவிர !!