பூவுக்கினி பூமணமாம் பூரிப்பாய் புதுஉறவாம் - மணியன்

நேற்று போல் நான்
இன்று இல்லை
மாற்றம் வந்த மர்மம் கூறும்
முகம் காட்டும் கண்ணாடி . . .

* * * * *

கீழ் உதடு சுழித்து நிற்கும்
மேல் இமையோ பட படக்கும்
கழுத்தில் ஓர் வியர்வைத் துளி
காவியமாய் எட்டிப் பார்க்கும். . .

* * * * *

கன்னம் இரண்டும் பள பளக்கும்
கை வருட இனி இனிக்கும்
உள் உதடு மலர் விரிக்கும்
ஊற்று ஒன்று பெருக்கெடுக்கும். . .

* * * * *

நல் இதயம் துடி துடிக்கும்
நாணம் தன் சிறகு விரிக்கும்
நாபியிலே உருண்டை வந்து
நர்த்தனமாய் நடனம் இடும் . . .

* * * * *

கோலம் போடும் மனக் கண்கள்
கோபுரமாய் உயர்ந்து நிற்கும்
தாளம் போடும் இளம் பாதம்
தாவி ஓட பரிதவிக்கும் . . .

* * * * *

நாதமுடன் நினைவு இனி
வேதம் கூறி கவி உரைக்கும்
நெற்றியில் இனி மொட்டு வந்து
சுற்றி வந்து வண்டு ஆகும். . .

* * * * *

எத்தனையோ மறை கனவு
பத்தும் இனி பறந்து போகும்
கழுத்தினில் வண்ணச் சரடு
இழுத்து எந்தன் தோல் நனைக்கும் . . .

* * * * *

அச்சாரம் போட்டு விட்ட
ஆரணங்கு இனி எனக்கு
ஆர்வம் கூட வருவதினால்
ஆழி கூட துளியாய் தோன்றும் . . .

* * * * *

துள்ளித் திரி கன்று நானும்
பள்ளி அறை பார் புகுவேன்
பாதியில் நான் துயில் துறப்பேன்
பக்கம் உனைப் பார்த்து ரசிப்பேன். . .

* * * * *

சொல்லலாம் வார்த்தை பல
சொர்க்கம் உடை நினைவு பல
அத்தனையும் உணர்ந்து கூற
ஆயுள் எனக்கு ஒன்று காணாதே, . . . . . . . . .


=== நன்றியுடன் மணியன் =====

எழுதியவர் : மல்லி மணியன் (10-Feb-14, 9:00 pm)
பார்வை : 280

மேலே