சிந்தை மயங்கிப் போனாள்

தந்திரம் பேசி அந்திரம் ஆகி
சுதந்திரம் இழந்து வருந்தி!
மந்திரம் செய்து மனை துறந்து
இந்திரா அந்தரமானாள்!

எந்திரன் பேச்சுத் திறன் கண்டு
இந்திரா மயங்கியே போனாள்!
உயிர் தந்தவர் இழந்து ஔிந்து
இந்திரன் பின்னே பணிந்தே போனாள்!

கந்தர்வக் கன்னி அவள் - காதலிலே
உந்தலாகி கந்தலாகிப் போனாள்!
பந்தல் அவள் காணாது திருமணப்
பந்தமதில் ரகசியமாய் இணைந்தே போனாள்!

சுந்தரன் அழகில் மயங்கி - அவள்
சிந்தை மயங்கிப் போனாள்!
கந்தகக் குச்சி போல அவன் பின்னே சீறிப்
பாய்ந்தே போனாள்!

சொந்தம் மறந்து பந்தம் இழந்து - கடல்
நந்தம் போல ஊர்ந்தே போனாள்!
குந்தன் என நினைந்து - அவன் பின்னே
குந்தம் ஏறிப் போனாள்!

எழுதியவர் : ஜவ்ஹர் (10-Feb-14, 9:44 pm)
பார்வை : 97

மேலே