தாயுமானவன்

தாயில்லையேல் என்னடா...?
நான் தாய்ப்பால் தரா தாயடா....
கண் திறந்த பூவே
உன்னைத் தாலாட்டும் தென்றல் நானே
கண் தூங்கு
கண்கள் மானே......!
மண்ணுக்குள் விதைப்போல
மனசுக்குள் உனை சுமந்தேன்
நெஞ்சின் மேல் தூங்கவைத்து
கடிகார முள் தொலைத்தேன்
நீ முத்தமொன்று வைத்தாலே
கன்னம் இங்கு கரையுதடா.....!
சின்ன சத்தமொன்று போட்டாலே
பூக்களும் தாழ் திரக்குமடா
உன்னுடன் விளையாட
என் வயதைத் தொலைத்தேனே,
தந்தையும் உன் முன்னே
மீசை வைத்த சேய் ஆனேனே...
பூபோல் மனமே
உன்னைக் கட்டிக்கொண்டால்
தூய்மையான மனமே
உன்னுடனே பேசிக்கொண்டால்....!
அன்புள்ளம் கொண்ட
நல்லுள்ளம் எல்லாம்
தாயுள்ளமே....!
இதில் ஆணாய், பெண்ணாய் பேதமில்லை
பாசத்திற்கு பாலினமுமில்லை.....!