இயந்திர மனிதா

இயந்திர மயமான மனிதனின் வாழ்கையில்
இன்று..!!
காசு தேடலில் காதல் குறைகிறது..!!
கவிதை எழுதிய கைகள்..!!
வீட்டுக் கணக்கை மட்டுமே எழுதுகின்றன..!!

மழையை ரசித்து வருடமாகிவிட்டது..!!
மாதச் சேமிப்பை ரசிக்க மனம் பழகிவிட்டது..!!

ஆகாயம் ரசித்து ஆண்டகிவிட்டது..!!
அடுக்கு மாடியின் விட்டம் ஆகாயமாகிவிட்டது..!!

பொண் தேடவும் பொருள் தேடவும்..!!
நேரம் செல்வதால் பூக்களும் புன்னகையும்..!!
புதியவை ஆகிவிட்டன..!!

கடிகார முட்களில் காதல் சிக்கித்தவிக்கிறது..!!
இரை தேடும் பறவைக்கு தேடல் ஒரு சுகம்..!!
எல்லாம் தேடும் மனிதனுக்கு தேடல் ஒரு கணம்..!!

இயந்திரத் தன்மையில் இயங்கும் மனம்..!!
வேகமாய் காலத்தை ஒட்டுகிறது..!! - சக்கரமில்லாமல்..!!

எழுதியவர் : (11-Feb-14, 1:27 pm)
சேர்த்தது : Sudharenganathan
Tanglish : iyanthira manithaa
பார்வை : 66

மேலே