உன காந்த கண்கள்

உன காந்த கண்கள்
என் இதயத்தை இழுக்கிறது
நீ விடும்.
காதல் பெரு மூச்சு
என் மேனிதன்னை
அனலாக்குகிறது
ஆரஞ்சு சுளை இதழ்கள்
என்னை நிலை குலைய
செய்கிறது
சங்கு நிற கழுத்து என்னை
சங்கடத்தில் தள்ளுகிறது
உன் சிற்றிடை என்னை
கவர்ந்திழுக்கிறது
உன் அன்ன நடை கண்டு
என் பாதங்கள் உன்னிடம் வர
நடை பயில்கிறது
எதனால்?
இப்படி யெல்லாம் என்னை
பித்தனாக்கி
உன்னிடம் காதல்
மாணவனாக்கி
விட்டாய்?
ஓ.......................
நீதான் என்
காதல் மங்கையோ?

எழுதியவர் : (12-Feb-14, 2:51 pm)
பார்வை : 232

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே