இணை முரண்
காத்தவராயன்-ஆரியமாலா,
லைலா-மஜ்னு,
அம்பிகாபதி-அமராவதி,
ரோமியோ-ஜுலியட்,
கிளியோபாட்ரா-ஆண்டனி
பாரிஸ்-ஹெலினா,
நெப்போலியன்-ஜோஸ்பின்,
...
...
...
...
...
சேராத காதலின் சிறப்பினை ஓதும் மாறாத மாந்தர்காள்..!
சோர்ந்தே கிடக்கும் ஆறாம் அறிவைச் சற்றேனும் எழுப்புங்கள்....
வாயிற்கதவைமட்டும் செய்துவிட்டு அதை வாழ்வில்லமெனச் சொல்லத்தகுமோ....?
பெயர்த்தெடுத்த கல்லுக்கெல்லாம் சிலையென்று பெயராகுமோ...?
தலையை மட்டும் தனியேகொண்டு உயிர் தழைத்திருக்கவியலுமோ...?
பிரியாதிருப்பதல்ல காதல்..பிரிதலை உணர்தல்தான் காதல்...!
இணைவதற்கான போராட்டம் மட்டுமல்ல காதல்.. இணைபிரியாது வாழ்வதுதான் காதல்...!