காதல் வெடிப்பு

[காதலி ஒருத்தி தன் காதலனிடம் சொல்கிறாள் ]
காதலி ; கண்ணாடி சிறைக்குள்
இருந்து உன்னை காதலித்தேன் ,
வாழத்தான் இல்லையென
மறுதலித்து போனாய் ........................
சிகரத்தை தொடுவதே எனது ஆசை,
ஏன் என் சிந்தையை விரட்டுகிறாய்?
சிற்சில சிற்பமான -எனது ஏக்கத்தை
செதுக்காமல் போகின்றாய் ?
காலத்தின் கனியை புசிக்க
காயாய் நின்றேன் உனக்காக .........
ஏன் விட்டு சென்றாய்?
காதலன் ;நினைவோட்டத்தை
எடுத்து செல்ல
உன் வெண்மையை,
குலைத்து மேகமாய் வா பெண்ணே ....
எல்லா நிகழ்வோடும் உன்னை
சொந்தமாக்கி கொள்ள........
காதலி ;என்ன செய்கிறாய்
என்னை ?
உன் கண்ணின் ஒளி-ஊடுருவி
என் கண்ணீரில் தெரிக்கிறதே ..............
''காதல் வெடிப்பில்''.

எழுதியவர் : (14-Feb-14, 6:55 am)
சேர்த்தது : maryangelamercy
Tanglish : kaadhal
பார்வை : 73

மேலே