காதல் தண்டவாளம்

பூவென்பார் புல்லில் பனியென்பார்
தேனென்பார் தெவிட்டா அமுதேன்பார்
கரும்பென்பார் கனியின் சுவையென்பார்
இன்னும் எத்தனையோ வகையென்பார்
காதலை நானோ தண்டவாளம் என்பேன்
இரயில் பாதையாய் – இரு
வரி கவிதை காதல்
முதல்வரியாய் ஆண் வேண்டும்
மறுவரியாய் பெண் வேண்டும்
ஒருசேர - எண்ணில்லா இணைப்புகளாய்
அன்பில் புரிதல் வண்டும்
நெருங்கி இணைந்தாலும்
சற்று இடைவெளி வேண்டும்
அதன் வழி – பெண்ணின்
சுதந்திரம் வேண்டும்
தடம் புரளாத – கற்பு
நெறி வேண்டும் – அது
காக்க கொஞ்சம் – காதலில்
சகோதரத்துவம் வேண்டும்
இருவரி பாதைபோல் – திரு
மணமென்னும் ஒரு வழி
சேர்க்க வேண்டும்
இரும்பைப்போல உறுதியோடு
இணைந்திடவே வேண்டும்
கற்கள் பல நிறைந்தாலும்
பயணம் இனித்திடவே வேண்டும்
ஏற்றத் தாழ்வு எதிர் வரினும்
அன்பில் சமன்படவே வேண்டும்
ஒரு வழி பாதையென
புரிந்து செல்ல வேண்டும்
தனிப்பெட்டி பயணத்திற்கு
தண்டவாளம் தேவையில்லை
உறவுகள் இணைப்போடு
தொடர் ஓட்டம் கொள்வீரே!