சுடப் பட்ட நெற்றிக் கண்
மரம் கொத்தியும்
சிற்பியோ...?
உளிஎன்ற
அலகு செதுக்கி இங்கே
மரத்துக்கும்
நெற்றிக்கண் திறந்திருக்கிறது.....!!
அது சரி மீதி 2 கண்கள் எங்கே ?
அதோ உச்சி கிளை நுனி
அதுதான் - ஒரு கண் பரப் பிரம்மத்தை தேடி.....
மற்றோடு கண் - ஆணி வேர் நுனி மன
ஆழத்தில் தவப் பயன் ஆராய்ந்து........
எனினும் இந்த மரத்தின்
நெற்றிக் கண் சுடப்பட்டது......
மனிதன் வைத்த குறி தவறி
துப்பாக்கி குண்டு பாய்ந்து........
உண்மையான ஆன்மிகம்
பல போலிகளால்
பொய்யென சித்தரிக்கப் படுவதாய்.....
நெற்றிக் கண் சுடப்பட்டது......
மனிதன் வைத்த குறி தவறி
துப்பாக்கி குண்டு பாய்ந்து.....