காதலென்னும் சோலையினில்நிறைவுப்பகுதி

அந்த அதிகாரி ராஜலெக்ஷ்மியிடம் "உன்னை நானே திருமணம் செய்து கொள்கிறேன்" என்று சொன்னதும் அதை அவளால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை; ஒருமுறை அவரை ஆச்சரியமாக பார்த்தாள்!!!!



இதெல்லாம் சரியில்லை வேண்டாம் என்றாள் ராஜலெக்ஷ்மி.

ஹலோ! என்ன நீ இப்டி சொன்னாலும், அப்டி சொன்னாலும் ஏற்றுகொள்ளமாட்டாயா?


நான் உன் அண்ணனிடம் பேசிக்கொள்கிறேன், நீ இப்போது என் வீட்டிற்கு வந்து தாராவின் மீது ஒரு புகார் எழுதி கொடு அவளை நான் கவனித்துக்கொள்கிறேன்,

உன் அண்ணன் என் வீட்டில்தான் காத்துக்கொண்டிருப்பார் என்று சொல்லி அவளையும் அழைத்துக்கொண்டு அவனது வீட்டிற்கு கிளம்பினார்கள்........................



அங்கு இந்த அதிகாரியின் வீட்டில் இவருக்காக காத்துக்கொண்டிருந்த ராஜா வெகு நேரமாகியும் இவரை காணாததால் கவிதாவை அழைத்துக்கொண்டு பக்கத்தில் இருக்கும் டீக்கடைக்கு சென்றான்..............



நீ காலையில இருந்தே எதுவும் சாப்பிடாமல் இருக்கிறாய்; இந்தா! இந்த டீயை குடி என்று சொல்லிவிட்டு ஒரு டீ வாங்கி கவிதாவிடம் கொடுத்தான்.



அந்த டீ எவ்வளவு சூடாக இருந்ததோ; அந்த அளவுக்கு அவளுடைய மனதும் இருந்தது, அவளுடைய முழு யோசனையும் ராஜலெக்ஷ்மியை நோக்கியே இருந்தது!!!!!!!



கவிதாவின் மனநிலையை புரிந்த ராஜா கவலைப்படாத கவி கண்டிப்பா ராஜலெக்ஷ்மி கிடச்சிருவா என்று ஆறுதல் படுத்தினான்.


அவன் வார்த்தைகள் காதுகளுக்கு ஆறுதலாக இருந்தாலும் மனதிற்கு ஆறுதல் அளிக்கவில்லை...........



டீ குடித்துக்கொண்டிருந்தவளுக்கு ராஜாவின் கை எதேச்சையாகப்பட்டு டீ அவள் மீது கொட்ட? டீக்கடைக்கு பக்கத்திலிருந்த வீட்டில் தண்ணி வைத்து அலம்ப சென்றாள் கவிதா?????



அந்த நேரம் தனது வீட்டிற்கு ராஜலெக்ஷ்மியை அழைத்து வந்துகொண்டிருந்த அந்த அதிகாரி ராஜா டீக்கடை வாசலில் நிற்பதை பார்த்ததும் ராஜலெக்ஷ்மியை அழைத்து அவனிடம் சென்றார்,,,,,,,,,



ராஜலெக்ஷ்மி ராஜாவை பார்த்ததும் அண்ணா! என்று ஓடி சென்று அவனை கட்டிக்கொண்டாள்!!!!!!!


இருவருமே கண்ணீர் மல்க அழுதனர்; உனக்கு ஒன்றும் ஆகவில்லை இல்ல! அழாதம்மா, அழாத என்று அவள் தலையை தடவி தேற்றிக்கொண்டிருந்தான்.............



அப்பொழுது அங்கு வந்த கவிதா அந்த அதிகாரியைப்பார்த்ததும் ராஜலெக்ஷ்மியைக்கூட கவனிக்காமல் கண்ணீருடன் அவன் மார்பில் சாய்ந்து அழுதாள்?????



இதை பார்த்த ராஜாவுக்கும் ராஜலெக்ஷ்மிக்கும் எதுவும் புரியவில்லை??


"என்னை காப்பாற்றியதர்காகவா அண்ணி இப்டி அவரை அணைக்கிறார்கள்" என்று புரியாதவளாய் ராஜாவிடம் கேட்க? ராஜாவும் சற்று எரிச்சலுடன் அவளைப்பார்த்தான்.




அவனின் பார்வைக்கு விளக்கம் கிடைக்கும் விதமாக "பிரசாத், பிரசாத், என்று சொல்லி" அழுது கொண்டிருந்தாள் கவிதா???



அக்கா அழாதே! அப்போ நான் கண்டுபிடித்து காப்பாத்தியது; உன் அண்ணியா? என்று ஆச்சர்யப்பட்டான் பிரசாத்!!!!!!!!



ராஜலெக்ஷ்மிக்கும் ஒரே சந்தோசம் நம்மை காப்பாற்றியது நம் ஆசை காதலனே! என்று மனதிற்குள்பரவசமடைந்தாள்;;;; விதி எப்படி எல்லாம் விளையாடுகிறது என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டாள்.



உள்ளே சென்று பேசலாம் என்று தனது வீட்டிற்குள் அழைத்து சென்றான் பிரசாத்............


நடந்த அனைத்து விபரங்களையும், தாராவின் நடவடிக்கைகளையும் தெளிவாக ராஜாவிடம் கூறி ஒரு முடிவுக்கு வந்தனர் 4பேரும்.


(அந்த நேரம் கவிதாவிடம் கோவப்பட்டான் பிரசாத்,,,,,,)


என்ன கவிதா நீ என்கிட்ட இந்த விஷயத்தை பற்றி சொல்லவே இல்லை? விதியபார்த்தியா! இப்படி கொண்டு சேர்த்திருக்குது நான் மட்டும் போகவில்லை என்றால் உன் அண்ணியை என் வருங்கால மனைவியை உயிருடன் கொண்டு வந்திருக்க முடியாது!!என்று வருத்தப்பட்டான்.



மன்னித்து விடுடா? உன்கிட்ட சொல்லனும்னுதான் நினச்சேன் ஆனால் உன் நம்பர் உபயோகத்தில் இல்லை என்றுதான் பதில் வருது உன்னை தொடர்பு கொள்ளமுடியவில்லை என்றாள்.............



ஓ! அதுவா அது உன் அண்ணி பண்ணின வேலைதான் உன்னுடன் போனில் பேசிக்கொண்டிருக்கும் போது என் மேல் மோதி செல்போன் உடைந்து விட்டது என்றான்.


அச்சச்சோ! அதான் லைன் கிடைக்கல சரி, சரி செல்போன் போனாலும் உன் வாழ்க்கை கிடைத்ததே என்று பெருமை பேசினாள் கவிதா!


ஆமா என்றவன் ராஜலெக்ஷ்மியை பார்க்க! அவளின் ஒரு கண்ணில் இவன் போலிஸ் அதிகாரியாகவும், மறுகண்ணில் அன்பு காதல் கணவனாகவும் தெரிந்தான்.............



அனைவரும் கிளம்பி ராஜா வீட்டிற்கு சென்று நடந்த விபரத்தைக்கூறி தாரா வீட்டில் உள்ளவங்களையும் அழைத்து அவளுக்கு அறிவுரை சொல்லி நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொள் என்று அவளை கம்பி எண்ண வைக்காமல் விட்டு விட்டனர்.



தாராவும் தனது தவறை உணர்ந்து ராஜா எனக்கு கிடைக்கவேண்டும் என்று தான் புத்தி சரி இல்லாமல் என்னென்னவோ பண்ணிவிட்டேன் அனைவரும் என்னை மன்னித்துவிடுங்கள் என்று மன்னிப்புக்கேட்டுக்கொண்டாள்!!!!!



கடைசியாக கவிதாவையும், ராஜலெக்ஷ்மியையும் காலில் விழுந்து மன்னிப்புக்கேட்டு கண்ணீருடன் அணைத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினாள்...........



"வீட்டுக்கு வந்தசனியன் வாசலோட போயிடிச்சி" என்று கவிதாவும் ராஜலெக்ஷ்மியும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துகொண்டு பெரு மூச்சுவிட்டனர்!



சரி இனி நடக்க வேண்டியதை பார்ப்போம் என்று அடுத்த முகூர்த்தத்தில் பிரசாத்துக்கும் ராஜலெக்ஷ்மிக்கும் திருமணம் என்று முடிவு செய்தனர்..........



அவர்கள் ஏற்பாடு செய்த வண்ணம் கோவிலில் திருமணத்தை முடித்து விட்டு மண்டபத்தில் கோலாகலமாக உறவினர்களும் நண்பர்களும் கலந்து மணமக்களை வாழ்த்தி கல்யாண விருந்தும் சாப்பிட்டனர்.........

(இந்த திருமணம் அழகாக நடக்க)


இன்னொரு புறம் தாராவும் தன் வாழ்க்கையை தொடங்குகிறாள் அந்த போலிஸ் கண்காணிக்கும் நண்பனுடனு தன் புது வாழ்வை இந்த ஜோடிகளின் வாழ்த்துக்களுடன் மணந்து கொண்டாள்.



இனிதே காதல் வனத்தில் பூப்பூக்கும் என்ற நம்பிக்கையில் 3 ஜோடிகளுமே வாழ்க்கையை தொடங்கினர்!!!!!!!






சுபம்.

எழுதியவர் : (15-Feb-14, 4:03 pm)
பார்வை : 493

மேலே