உலகின் சிறந்த காதலர்கள்

அந்தி மயங்கும் நேரத்தில்
ஒற்றை மரத்தின் அடியில்
மொட்டுக்கள் தன்
இதழ்களை விரிக்கையில்
தோன்றுமே ஒரு ஓசை
அதையும்விட மென்மையான
குரலில்
என் காதருகில்
அவள் தன் இதழ்களை விரித்துக்
கொண்டிருந்தாள்
எப்பொழுதும் கண் சிமிட்டிக்
கொண்டிருக்கும்
நட்சத்திரங்கள்
வெட்கத்தால் கண்களை மூடிக்
கொள்ள
பொல்லாத நிலா மட்டும்
மெல்ல எட்டிப் பார்த்துக்
கொண்டிருந்தது
உலகின் சிறந்த காதலர்களை !!

எழுதியவர் : அச்சில் ஏறா கவிதைகள் (16-Feb-14, 10:46 am)
பார்வை : 292

மேலே